Site icon என். சொக்கன்

அழுத்தம்

‘குருவே, தங்கள் சொற்பொழிவுகளைக் கேட்பதற்காகப் புதிதாக வாங்கிய Headphone நாள்முழுக்கக் காதை அழுத்தி நோவுண்டாக்குகிறது. இதிலிருந்து மீள என்ன வழி?’ இரு காதுகளையும் பொத்தியபடி கேட்டான் சிஷ்யன்.

‘புதியவை என்றாலே அழுத்தம்தான் பிள்ளாய்’ என்றார் குருநாதர். ‘கொஞ்ச நாள் உன்னுடைய ஹெட்ஃபோனை அந்தப் பசுமாட்டின் காதில் மாட்டி வை. எல்லாம் சரியாகிவிடும்.’

சிஷ்யன் அக்கறையோடு புதிய ஹெட்ஃபோனை மாட்டுக்குப் பொருத்தினான். அதைச் சும்மா மாட்டுவானேன் என்று குருநாதருடைய சொற்பொழிவுகளை நாள்முழுக்க ஒலிக்கவிட்டான்.

நான்கே நாட்கள்தான். ஹெட்ஃபோன் சரியாகிவிட்டது. இப்போது சிஷ்யனுக்கு எந்தக் காது வலியும் இல்லை.

ஒரே பிரச்னை, அவ்வப்போது குருநாதருடைய மாடு சொற்பொழிவாற்றத் தொடங்கிவிடுகிறது.

Exit mobile version