Site icon என். சொக்கன்

வாடா, பாத்துக்கலாம்

அலுவலகத்திலிருந்து திரும்பும் வழியில் இரண்டு இளைஞர்களைப் பார்த்தேன். ஒருவன் இன்னொருவனுடைய கையைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான். இன்னொருவன் அவனிடமிருந்து விடுபட்டு ஓட முயன்றுகொண்டிருந்தான், ‘டேய், வேணாம்டா, சொன்னாக் கேளு.’

‘நீ நான் சொல்றதைக் கேளு’ என்றான் முதல் இளைஞன். ‘நீ பேசாம வா. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.’

‘வேணாம்டா. எனக்கு இன்டர்வ்யூவெல்லாம் சரிப்பட்டுவராது. கண்டிப்பா ஃபெயில் ஆகிடுவேன்’ என்றான் இவன்.

‘இப்படியே ஓடிக்கிட்டிருந்தா உனக்கு எப்படி வேலை அமையும்? இன்டர்வ்யூ இல்லாம உங்கப்பனா வேலை கொடுப்பான்? நாலு வாட்டி இந்தமாதிரி வந்து அடி வாங்கினாத்தான் அஞ்சாவது வாட்டி வாயைத் திறந்து பேசுவே, வேலை கிடைக்கும்.’

நாம் எல்லாரும் இப்படி ஆளுக்கு ஒரு நண்பனைச் சம்பாதித்துவிட்டால் போதும். எந்த நாளும் இனிய நாள்தான்.

Exit mobile version