Site icon என். சொக்கன்

கடமைப் பேரரசர்

நங்கையின் கல்லூரியில் எல்லா Assignmentsஐயும் நள்ளிரவு 11:59க்குள் சமர்ப்பிக்கவேண்டும். அந்த நேரத்தைத் தாண்டினால் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

இதனால், எல்லா மாணவர்களும் இரவு 10லிருந்து 11:59வரை மிகுந்த சுறுசுறுப்புடன் இருப்பார்கள். Assignmentஐ எழுதிச் சமர்த்தாகச் சமர்ப்பித்துவிட்டுத் தூங்கச்செல்வார்கள்.

அதன்பிறகு என்ன நடக்கும்?

மறுநாள் காலை பேராசிரியர் அந்த Assignmentsஐத் திருத்துவார், மாணவர்களுக்கு உரிய மதிப்பெண்களைக் கொடுப்பார். இதுதானே உலக வழக்கம்?

ஆனால், இந்தக் கல்லூரியில் ஒரு விநோதமான பேராசிரியர் இருக்கிறார். என்றைக்கெல்லாம் அவருடைய மாணவர்கள் Assignmentsஐச் சமர்ப்பிக்கவேண்டுமோ, அன்றைக்கெல்லாம் அவர் 7 மணிக்கே சாப்பிட்டுவிட்டுத் தூங்கிவிடுவாராம்.

பின்னர், சரியாக 11:55க்கு அவருடைய அலாரம் ஒலிக்குமாம். எழுந்து உட்கார்ந்து, கம்ப்யூட்டரைத் திறந்து, மாணவர்கள் சமர்ப்பித்த Assignmentsஐத் திருத்தத் தொடங்குவாராம். அதிகாலை 2 அல்லது 3 மணிவரை வேலை செய்து எல்லா Assignmentsஐயும் திருத்திவிட்டுதான் தூங்கச் செல்வாராம். இதனால், மாணவர்கள் தூங்கி எழும்போது அவர்களுடைய வேலை மதிப்பிடப்பட்டுத் தெளிவான குறிப்புகள், அறிவுரைகளெல்லாம் வழங்கப்பட்டிருக்குமாம்.

நான் கடமை வீரர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், இவர் கடமைத் தளபதி, கடமைப் பிரபு, கடமை அரசர், கடமைப் பேரரசராக இருப்பார்போல!

Exit mobile version