Site icon என். சொக்கன்

CIA (அமெரிக்கப் புலனாய்வுத் துறை வரலாறு)

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. குறித்து பெரும்பாலும் நல்லவிதமாக யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தேசப் பாதுகாப்புக்கு என்று சொல்லித் தொடங்கப்பட்ட அமைப்பு, வெகு விரைவில் உலகப் பாதுகாப்புக்கே ஒரு வில்லனாகிப் போனது விசித்திரமல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்ட காரியம். அமெரிக்க – சோவியத் பனிப்போர் காலத்துக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட இந்த உளவு அமைப்பு, பனிப்போர் சமயத்திலும் அதற்குப் பிறகு இன்றுவரையிலும் பல்வேறு தேசங்களில் நிகழ்த்தியிருக்கும் திருவிளையாடல்கள் கொஞ்சநஞ்சமல்ல. சமீபத்திய ஆஃப்கன், ஈராக் யுத்தங்களில் சி.ஐ.ஏ.வின் பங்களிப்பு அபரிமிதமானது. நம்பமுடியாதது. ஓர் உளவு அமைப்பு என்னவெல்லாம் செய்யும், என்னவெல்லாம் செய்யாது என்று வரையறுப்பது மிகவும் சிரமமாகிப் போனதன் மூலகாரணம் சி.ஐ.ஏ. தன் பல்வேறு ‘கவிழ்ப்பு’ முயற்சிகளில் சி.ஐ.ஏ. சறுக்கியிருந்தாலும், இன்றுவரை அமெரிக்காவின் ஆளுமையை வளர்த்ததில் சி.ஐ.ஏ.வின் பங்கு மிக முக்கியமானது. சி.ஐ.ஏ.வின் பல்வேறு நடவடிக்கைகளைக் காரணகாரியங்களுடன் விளக்கி, அலசும் இந்நூல், அந்த அமைப்பின் தோற்றம் முதல் இன்றைய இருப்பு மற்றும் செயல்பாடுகள் வரை விரிவாகப் பேசுகிறது.

Exit mobile version