Site icon என். சொக்கன்

பரப்பு, பரபரப்பு

நல்ல செய்தி(?) எதைப் பார்த்தாலும் உடனே ‘ஃபார்வர்ட்’ பட்டனை அழுத்துகிறவரா நீங்கள்? ‘நல்ல விஷயத்தை நாமதான் பரப்பணும் சார்’ என்று அதை நியாயப்படுத்துகிறவரா? யாராவது அது உண்மைதானா என்று கேள்வி எழுப்பினால், ‘Forwarded as recieved’ என்று மொக்கையாகச் சமாதானம் சொல்கிறவரா? ஆம் எனில், இங்கே க்ளிக் செய்து ஒரு பிரமாதமான கட்டுரையைப் படியுங்கள்.

கொஞ்சம் நீளமான கட்டுரைதான். ஆனாலும் பொறுமையாகப் படியுங்கள். ஒரு ‘நல்ல செய்தி’யை ‘உருவாக்குவது’ எவ்வளவு எளிது என்று புரியும்.

அதனால் என்ன? பொய்யாகவே இருந்தாலும் அது நல்ல செய்திதானே என்று நினைக்காதீர்கள். இதுபோன்ற பொய்யான நல்ல செய்திகள் பரவினால் உண்மையான நல்ல செய்திகள் மதிப்பிழக்கும், அவற்றை யாரும் நம்பக்கூட மாட்டார்கள்.

யோசித்துப்பாருங்கள், இன்றைக்கு யாராவது நேர்மையாக நடந்துகொண்டால் சட்டென்று நமக்கு என்ன தோன்றுகிறது? ‘பையன் நடிக்கறானோ?’ என்றுதானே? அந்த ஐயம் ஏன் எழுகிறது என்று யோசித்தால், அப்படி நடிக்கிற பொய் நேர்மையாளர்கள் பலரை நாம் பார்த்ததால்தான். அதைப்போல, நாம் படிக்கிற நல்ல செய்திகள் பலவும் பொய் என்று தெரியவரும்போது, உண்மையான நல்ல செய்திகளைக்கூட நாம் ஏற்க மறுப்போம், உலகில் நம்பிக்கை குறையும், எதிர்மறைச் சிந்தனை மிகுதியாகும்.

ஆக, இன்றைய தேதிக்கு நாம் அனைவரும் பின்பற்றவேண்டிய கட்டாயப் பொன்விதிகள்:

1. இணையத்தில் படிக்கிற “எதையும்” (இந்தக் கட்டுரையைக்கூடக்) கேள்வி கேட்காமல் நம்பிவிடக்கூடாது; நம்பினாலும்கூடப் பரவாயில்லை, அதை ஃபார்வர்ட் செய்துவிடக்கூடாது

2. ஃபார்வர்ட் செய்தே ஆகவேண்டும் என்று கை பரபரத்தால், 10 நிமிடமாவது செலவழித்து அச்செய்தியை ஆராயவேண்டும்; அது உண்மைதான் என்று உறுதிப்படுத்திக்கொண்டு அதன்பிறகு ஃபார்வர்ட் செய்யவேண்டும்; அதற்குத் துப்பில்லை என்றால் அந்த ஃபார்வர்ட் பட்டனை உடைத்துப்போடவேண்டும்

Exit mobile version