Site icon என். சொக்கன்

“காந்தி யார்?” & “காந்தி வழி”

‘காந்தி யார்?’ நூலுக்கு அமேசானில் வந்துள்ள விரிவான, துல்லியமான விமர்சனங்கள் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. பொதுவாக இதுபோன்ற நூல்களுக்கு எழுத்தாளரும் பதிப்பாளரும்தான் விமர்சனங்களை, அறிமுகக் குறிப்புகளைத் தேடி ஓடவேண்டும், ‘நீங்க எழுதறீங்களா?’, ‘அவரு எழுதுவாரா?’ என்று பலரைக் கேட்டுச் சிலரை எழுதவைக்கவேண்டும். ஆனால், இந்த நூலுக்கு அந்த விபத்து நடக்கவில்லை. வெளியீட்டுக் கூட்டமோ விளம்பரமோ இல்லாமல் இந்த நூல் பலரைச் சென்றுசேர்ந்திருக்கிறது. நான் என்ன நோக்கத்துடன் இந்நூலை எழுதினேனோ அதைப் பெரும்பாலான வாசகர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.

ஒரே குறை, குழந்தைகளும் இந்நூலைப்பற்றிப் பேசத் தொடங்கினால் இன்னும் நன்றாக இருக்கும்!

இந்நூலின் தொடர்ச்சிபோல், வரும் புத்தகக் கண்காட்சியில் ‘காந்தி வழி’ வெளியாகிறது. உண்மை, அகிம்சை, கட்டுப்பாடு, உடல் உழைப்பு, தீண்டாமை ஒழிப்பு, சுதேசி உள்ளிட்ட காந்தியின் முதன்மைக் கொள்கைகள் 14ஐ முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் வழிகாட்டி நூல் இது.

‘ஆனா, இதெல்லாம் இந்தக் காலத்துக்குச் சரிப்படுமா சார்?’ என்கிற கேள்வி உங்கள் மனத்தில் எழுவது இயல்புதான். அந்தக் கேள்விக்குப் பூசி மெழுகாமல் பதில் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் முதன்மை நோக்கம்.

ஜனவரிவரை காத்திருங்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் காந்தியிசத்தை அழகாகவும் தெளிவாகவும் முக்கியமாக, Practicalஆகவும் அறிமுகப்படுத்துகிற ஒரு நூல் கிடைத்துவிடும்!

‘காந்தி யார்?’ நூலை வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.

‘காந்தி யார்?’ நூலைப்பற்றிய வீடியோ அறிமுகம் ஒன்று இங்கு உள்ளது:

Exit mobile version