Site icon என். சொக்கன்

யார்மீது பொறாமை?

‘உங்களுக்கு யார்மீது பொறாமை வரும்?’ என்று சி. சரவண கார்த்திகேயன் கேட்டிருந்தார்.

சும்மா படம் போடுவதற்காகச் சொல்லவில்லை, உண்மையிலேயே எனக்கு யார்மீதும் பொறாமை இல்லை. கடவுள் எனக்கு அள்ளிக் கொடுத்தாரோ, கிள்ளிக் கொடுத்தாரோ, ‘இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாமே’ என்று ஏங்காத, ‘என்னைவிட அவனுக்கு நிறையக் கொடுத்துவிட்டாரே’ என்று ஒப்பிட்டுப்பார்த்து வருந்தாத மனத்தைக் கொடுத்திருக்கிறார்.

யோசித்துப் பார்த்தால், நான் பொறாமைப்படுகிற, அல்லது, எரிச்சலடைகிற ஒரே வகையினர்: திறமைக்குமேல் (சில நேரங்களில் திறமையே இல்லாமல்) அங்கீகாரம் பெற்றவர்கள்.

அதே நேரம், என் பொறாமை அவர்களுக்குக் கிடைத்துவிட்ட அங்கீகாரத்தால் இல்லை, நான் அதை நினைத்து ஏங்குவதால் இல்லை, அந்த அங்கீகாரம் அவர்களுக்கு வந்த விதம் நியாயமாக இல்லை என்று எனக்குத் தோன்றுவதால்தான். Life must be fair, அவ்வளவுதான் என் எதிர்பார்ப்பு!

Exit mobile version