புதிதாக வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கு பணியிடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், என்பதை அன்போடு அறிவுரையாகக் கூறும் பத்துக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு “நீ உன்னை அறிந்தால்”.
1974 ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு பெண்கள் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என்ற விளம்பரத்தை எதிர்த்து, ஒரு பெண் பெண்கள் ஏன் வேண்டாம் என்று கேள்வி எழுப்பி அத் தொழிற்சாலையில் பணிப்பெற்றார் அவரே சுதா , பின்னர் நாராயணமூர்த்தியை மணந்து தொழிர்துறையிலும், சமூகத் துறையிலும் பத்திரிக்கை துறையிலும் முன்னணியாக விளங்கினார் சுதா நாராயணமூர்த்தி. இதுபோன்ற பல ஓர வஞ்சனைகள் தொழில்துறையிலும் சந்திக்க நேரிடும். இது போன்று நிகழ்வுகளை தன் வாழ்வின் தடைக்கல்லாக எண்ணாமல் அவற்றைப் படிக்கல்லாக எண்ணி ஏறிப் பயணிக்க வேண்டும்.
கல்லூரிப் படிப்பை முடித்ததும் இங்கு கற்றலுக்கு விடுதலை என்ற உணர்வே பலரிடம் ஏற்படுகிறது. ஆனால் கற்றல் என்பது முற்றுப்பெறாத ஒரு விஷயமாக இருப்பது மட்டுமே நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காக அமையும் என்று குறிப்பிட்டக் கட்டுரை தனிச் சிறப்பாகவே அமைந்திருந்தது.
அலுவலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை முடித்தப் பின்னர் இருக்கின்ற எஞ்சிய நேரத்தில் அதைச் சார்ந்த மற்றொருப் பணியை கற்றுக் கொள்வதன் மூலமும் அதிகமான வேலைகளை செய்வது மூலம் அதில் அறிவினை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றக் கட்டுரை சிறப்பானது.
நூலில் இருந்து
📚’சுற்றி என்ன அரசியல் நடந்தாலும் அதில் வலியச் சென்று பேச்சுக் கொடுக்காமல் நம் வேலையைக் கவனிக்கவேண்டும், அப்படி இருந்தால் நம்மிடம் யாரும் வம்பு பேசமாட்டார்கள், வேலை ஒழுங்காக நடக்கும்’
📚நம்மிடம் உண்மையான திறமையும் ஆர்வமும் இருந்தால் மேலாளரோ, குழுத் தலைவரோ, மாட்யூலோ, நிறுவனமோகூட ஒரு பொருட்டு இல்லை, இவையெல்லாம் நகர்ந்துகொண்டே இருக்கப்போகிறவை, இவற்றைச் சார்ந்து நாம் இல்லை…
📚ஆங்கிலத்தில், ‘Pay it forward’ என்று ஒரு பயன்பாடு உண்டு. அதாவது, உங்களுக்கு ஒருவர் நன்மை செய்கிறார் என்றால், நீங்கள் அவருக்கு எந்தப் பதில் நன்மையும் செய்யவேண்டியதில்லை, அதற்குப் பதிலாக, அதேபோன்றதொரு நன்மையை இன்னொருவருக்குச் செய்துவிடவேண்டும். இதை எல்லாரும் தொடர்ந்தால் உலகில் தீமையைவிட நன்மை பெருகும் என்பது ஓர் எளிய கணக்கு.
📚திறமை, உழைப்போடு இன்னொரு முக்கியமான விஷயமும் தங்களுடைய வளர்ச்சிக்குத் தேவை என்பதை இவர்கள் அறிந்திருப்பதில்லை: சுற்றியிருக்கிற பிறரோடு நல்லுறவு.
📚நாம் பன்முகத்தன்மையை விரும்பி வரவேற்கவேண்டும்; நம்மைப்போலன்றி வேறுவிதமாகச் செயல்படுகிறவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்; அவர்களுடைய தன்மையை, எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களுடன் பழகவேண்டும், பிறருக்கும் இதைச் சொல்லித்தரவேண்டும்.
புதிதாக பணியில் சேருபவர்களுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் பணி சூழல் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதையும் சிறு சிறு அறிவுரைகள் மூலம் தான் அறிந்தவற்றை மிக எளிமையாக ஆசிரியர் விவரித்துள்ளார். புதிதாக பணியில் சேருபவர்கள் மட்டும் அல்லாது அனைவருமே வாசிக்க வேண்டியப் புத்தகம். பணி இடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது மற்றும் தனது பணியினை எவ்வாறு சிறப்பாக செய்யலாம் முதற்கொண்டு அனைத்து விதமான விஷயங்களையும் மிக எளிமையாகவே ஆசிரியர் விளக்கியுள்ளார்.
***
இந்த விமர்சனம் ‘வாசிப்போம் நேசிப்போம்’ குழுவில் வெளியானது. அதன் மூலப் பக்கம் இங்கு உள்ளது.
‘நீ உன்னை அறிந்தால்…’ நூலை வாங்க:
