Site icon என். சொக்கன்

இணையத்தைப் படிக்கும் மென்பொருள்

Read Aloud” என்கிற மென்பொருள் (Google Chrome, Mozilla Firefox Extension) தமிழ் வலைப்பக்கங்களையெல்லாம் அழகாகப் படித்துக்காட்டுகிறது. இயந்திரக் குரலைப்போல் செயற்கையாக இல்லை, உண்மையான மனிதக் குரலைப்போல்தான் தோன்றுகிறது, ஆனால், ஏற்ற இறக்கங்கள், சரியான இடங்களில் நிறுத்திப் படித்தல் போன்றவை சரியாக இல்லை. இந்த ஒரு குறையைமட்டும் மறந்துவிட்டால் இது ஒரு மிக நல்ல வசதி. நாம் படிக்க விரும்புகிற வலைப்பக்கத்தைத் திறந்து, இந்தப் பொத்தானை அழுத்தினால் போதும், திரையைப் பார்க்காமல் கட்டுரைகள், கவிதைகள், செய்திகளைக் “கேட்கலாம்”, Screen Time குறையும், கண்களில் அழுத்தமும் குறையும்.

ஆனால், இது பாதுகாப்பானதுதானா? நம்முடைய தனிப்பட்ட மின்னஞ்சல்களையெல்லாம் இதில் படிக்கலாமா?

இந்த மென்பொருளின் தனியுரிமைக் கொள்கையைப் படித்துப்பார்த்தேன். ‘நாங்கள் எந்தத் தகவலையும் உங்கள் கணினியிலிருந்து வெளியே அனுப்புவதில்லை, எல்லா ஒலி மாற்றங்களும் உங்கள் கணினியிலேயேதான் நடக்கின்றன’ என்கிறார்கள். என்றாலும், இயன்றவரை ரகசிய விஷயங்களை இதற்குப் படிக்கக் கொடுக்காமல் இருப்பது நல்லது.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்வதற்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்.

Exit mobile version