Site icon என். சொக்கன்

பனிப்பந்துக் கவிதை

Snowball Poem” என்று ஒரு கவிதை வகையைப்பற்றிக் கேள்விப்பட்டேன். சிறு பனித்துகள்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து பெரிய பனிப்பந்தாக மாறுவதைப்போல இந்தக் கவிதையின் சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக்கொண்டே செல்லுமாம்.

Image by Benoit Hamann from Pixabay

அதாவது, கவிதையின் முதல் வரியில் ஒரே எழுத்துதான் இருக்கவேண்டும், இரண்டாவது வரியில் இரண்டு எழுத்து, மூன்றாவது வரியில் மூன்று எழுத்து, இப்படியே நீட்டிக்கொண்டே செல்லலாம். எடுத்துக்காட்டாக:

நீ
ஒரு
பெரிய
அறிவாளி
என்றுதான்
உலகத்தார்
சொல்கிறார்கள்.

மேலே உள்ளது கவிதை இல்லை, சும்மா வடிவத்தைக் காண்பிப்பதற்காக எழுதினேன். நீங்களும் முயன்று பாருங்கள்.

Exit mobile version