Site icon என். சொக்கன்

So Good They Can’t Ignore You By Cal Newport (புத்தக அறிமுகம்)

Cal Newport எழுதிய So Good They Can’t Ignore You என்ற புத்தகத்தைப் படித்தேன். நமக்குப் பிடித்த வேலையைத் தேடித் திரிவதைவிட, கிடைக்கும் வேலையைச் சரியாகப் பயன்படுத்தி அரிய திறன்களைச் சேர்த்துக்கொண்டு, பின்னர் அவற்றை முதலீடாகக் கொண்டு பிடித்த வேலையைக் கைப்பற்றிக்கொள்வது எப்படி என்று மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். அதை வறட்டுத் தத்துவங்களாகச் சொல்லாமல் ஏராளமான எடுத்துக்காட்டுகள், உத்திகளுடன் அழகாக எழுதியுள்ளார்.

முக்கியமாக, இந்தப் புத்தகம் எந்த இடத்திலும் சோம்பலை ஆதரிப்பதில்லை. இதைச் செய்தால் போதும், எல்லாம் சட்டென்று மாறிவிடும் என்று பொய்யான நம்பிக்கைகளை அளிப்பதில்லை. உழைப்புதான், ஆனால் அதைச் சரியான திசையில் செலுத்துவது எப்படி என்று பிரமாதமாகக் கற்றுக்கொடுக்கிறார். அதன்மூலம், அவருடைய உத்தியை நாம் நம்முடைய துறையில்/வாழ்க்கையில் செயல்படுத்திக்கொள்வதை எளிதாக்கிவிடுகிறார்.

நூலின் ஒரே குறை, இருபது பக்கங்களுக்குமுன்னால் சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்பப் பலமுறை தொகுத்துச் சொல்வதுதான். ஆனால், அது Cal Newportன் எழுத்துப் பாணி என்று நினைக்கிறேன். அவருடைய மற்ற புத்தகங்களும் அப்படிதான் உள்ளன. அதனால், அதை மறந்துவிட்டுப் படிக்கலாம்.

இது எல்லாரும் படிக்கவேண்டிய புத்தகம், குறிப்பாக, கல்லூரியில் பயில்கிற, முதல் வேலையில் இருக்கிற இளைஞர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டும். உங்கள் மகன், மகள், உங்களுக்குத் தெரிந்த இளைஞர்களுக்குப் பரிந்துரையுங்கள், அல்லது, வாங்கிக் கொடுங்கள், அவர்களுடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு பரிசு இது. Strongly Recommended.

So Good They Can’t Ignore You புத்தகத்தை வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.

Exit mobile version