Site icon என். சொக்கன்

Trading in the Zone by Mark Douglas (நூல் விமர்சனம்)

மார்க் டக்ளஸ் எழுதிப் பெரும் புகழ் பெற்ற முதலீட்டுப் புத்தகமான “Trading in the Zone”ஐப் படித்தேன்.

பங்குச் சந்தையில் முதலீடு / வணிகம் செய்து லாபம் பெறத் தேவையான மனப்பாங்கு/மனப் பயிற்சியை ஆசிரியர் நன்கு விரிவாக எழுதியுள்ளார். பயனுள்ள கருத்துகள், சற்று முனைப்பைக் காண்பித்தால் நன்கு பின்பற்றக்கூடியவைதான். அதனால்தான் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கிற பங்குச் சந்தை உலகில் 20 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் இன்னும் நன்றாக விற்றுக்கொண்டிருக்கிறது.

ஆனால், ஒரு வாசகனாக இந்தப் புத்தகத்தில் நான் ஒரு பெரிய பிரச்சனையைக் காண்கிறேன்: வழக்கத்துக்கு மாறான, சட்டென்று விளங்கிவிடாத, அப்படி விளங்கினாலும் எளிதில் பயன்படுத்த இயலாத கருத்துகளைச் சொல்லும் ஆசிரியர் அவற்றை இன்னும் தெளிவான எடுத்துக்காட்டுகளுடன் விளக்க முயலவில்லை. அதுவும் இங்கு, அங்கு இல்லை, புத்தகம்முழுக்க எல்லா இடங்களிலும் இதே கதைதான். கடினமான ஒரு விஷயத்தைக் கிட்டத்தட்ட அதே சொற்களில் திரும்பத் திரும்பச் சொன்னால் திடீரென்று மக்களுக்கு அது நன்றாகப் புரிந்துவிடும் என்று நினைக்கிறாரோ என்று திகைப்பாக இருந்தது.

இதனால், அவர் விளக்கும் பல விஷயங்களை நானே ஓர் எடுத்துக்காட்டைச் சிந்தித்து, அதில் பொருத்திப் புரிந்துகொள்ள முயல்கிறேன். அது சரியான எடுத்துக்காட்டாக இருந்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால்? ஆசிரியர் சொல்லாத ஒரு திசையில் நான் சென்றுவிடக்கூடும். அதற்கு யார் பொறுப்பு?

நல்ல புத்தகம், படிக்கவேண்டிய புத்தகம், பயன் தரக்கூடிய புத்தகம், வாசகருக்கும் தனக்கும் இடையில் எழுத்தாளர் ஒரு திரையைத் தொங்கவிடாமல் இருந்திருந்தால் இன்னும் நல்ல புத்தகமாக இருந்திருக்கும்.

“Trading in the Zone” புத்தகத்தை வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.

Exit mobile version