Site icon என். சொக்கன்

சந்தை நுணுக்கம்

‘தக்காளி விலை கிலோ 120 ரூபாய் ஆகிடுச்சு, தெரியுமா?’ என்றார் மனைவி.

‘ஓ, அப்படியா? முன்பு என்ன விலை?’ என்று கேட்டேன்.

’40 ரூபாய் இருந்துச்சு. அது ரொம்ப அதிகம்ன்னு வாங்கலை. அஞ்சு ரூபாயாவது குறையும்ன்னு காத்திருந்தேன். ஆனா, மளமளன்னு 120க்குப் போயிடுச்சு.’

‘இப்ப என்ன செய்யப்போறே?’

’30 ரூபாய்ல வாங்கின தக்காளி கொஞ்சம் இருக்கு. அதை வெச்சு ரெண்டு நாள் சமாளிக்கப்போறேன். அதுக்கப்புறமும் விலை குறையலைன்னா இந்த விலையில கொஞ்சமா வாங்கிக்கலாம்.’

சுருக்கமாகச் சொன்னால், சிலர் பங்குச் சந்தையில் தட்டுத்தடுமாறிச் செய்வதை இந்திய இல்லத்தரசியர் காய்கறிச் சந்தையில் அட்டகாசமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

Exit mobile version