மிக்கி மவுஸ் என்ற ஒரே பாத்திரத்தின்மூலம் உலகப் புகழ் பெற்ற கலைஞர் வால்ட் டிஸ்னி. அதேசமயம், அவருடைய படைப்பாற்றலில் வந்துதித்த பாத்திரங்களைப் பல நாடுகள், பண்பாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் இன்றைக்கும் ரசித்து மகிழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தொலைநோக்குப் பார்வையோடு அவர் உருவாக்கிய பொழுதுபோக்குப் பாதையில்தான் இப்போதைய டிஜிட்டல் உலகம்கூட நடைபோடுகிறது.
வால்ட் டிஸ்னி வென்ற கதையைச் சுவையான நடையில் விவரிக்கிறது இந்நூல்.