மாணவர்களுக்கான தமிழ் : பாகம் 2

மாணவர்களுக்கான தமிழ் பாகம் 2 / Maanavargalukkana Tamil - Part 2 (Tamil Edition) by [என். சொக்கன் / N.Chokkan]

எப்போதும் எதையாவது மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று என்ன அவசியம்? தமிழையே எடுத்துகொள்ளுங்கள். பெயர்ச்சொல், உயிர்ச்சொல், உயிரளபெடை, ஒற்றளபெடை, நேர் நேர் தேமா என்று சூத்திரங்கள்போல் சிலவற்றை மனனம் செய்துகொள்வதன்மூலம் தமிழ் இலக்கணத்தைக் கற்கவோ கற்பிக்கவோ முடியாது. அதேபோல் இலக்கியம் என்பது கடவுள் வாழ்த்தோடு தொடங்கி மனப்பாடச் செய்யுளோடு முடிவடைந்துவிடும் ஒரு விஷயமும் அல்ல.

தழில் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு வண்ணமயமான உலகம். புலவர்களும் மன்னர்களும் சான்றோர்களும் சாமானியர்களும் ஒன்றுசேர்ந்து சேகரித்த பொரும் புதையல் அது. அந்த உலகை மனப்பாடம் செய்யமுடியாது, சூத்திரங்களால் விளங்கிக்கொள்ளவும் முடியாது. நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். தமிழைக் கற்பதற்குப் பதில் தமிழை ரசிக்க ஆரம்பிக்கவேண்டும்.

என், சொக்கன் எழுதிய இந்தப் புத்தகத்தின் நோக்கம் அதுதான். கதையை, கவிதையை, பாடலை, ஆடவை, அழகை, அறிவை, மண்ணை, மனிதர்களை ரசிக்க இந்தப் புத்தகம் ஓர் அற்புதமான தூண்டுதலாக இருக்கப்போகிறது. உற்சாகத்தோடு வாசிக்க ஆரம்பியுங்கள். முத்தமிழும் ஓடிவந்து உங்களை அணைத்துக் கொள்ளும்.

மூன்று பாகங்களாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற, ‘மாணவர்களுக்கான தமிழ்’ நூல் தொடரின் இரண்டாம் பாகம் இது. மற்ற இரு பாகங்கள் இங்கே: பாகம் 1, பாகம் 3