பல துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற சாதனையாளர்களுடைய இளவயது வெற்றிக்கதைகளை விறுவிறுப்பாக விவரிக்கும் நூல் இது. அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களைச் சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்லித்தருகிறது.
இதில் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சாதனையாளர்கள் (அதாவது, அவர்களுடைய இளவயது வடிவங்கள்) ஒவ்வொருவரும் வலியுறுத்தும் செய்தி ஒன்றுதான், ‘பிரச்னைங்க வரும், போகும், எல்லாம் சமாளிச்சுக்கலாம், நாங்க அப்படிதான் சமாளிச்சோம், நீங்களும் வாங்க ப்ரோ!’