தேர்வுகள் என்றவுடன் அச்சப்பட்டு நடுங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பாடங்களை நன்றாகப் படித்திருந்தாலும்கூட, இந்த அச்சத்திலேயே மதிப்பெண்களைக் கோட்டைவிட்டுவிடுகிறார்கள்; இதனால் அடுத்த தேர்வின்போது இன்னும் அதிகமாக அச்சப்படுகிறார்கள்.
வேறு சிலர், அதே தேர்வுகளைத் துணிவோடு சந்திக்கிறார்கள்; பதற்றமில்லாமல் அவற்றைச் சமாளித்துச் சாதிக்கிறார்கள்.
ஆக, தேர்வு என்பது சிங்கமோ புலியோ இல்லை, எல்லா விஷயங்களிலும் ஒழுங்கோடு திட்டமிட்டுச் செயல்பட்டால், தேர்வுகளை நினைத்து அஞ்சாமல், நினைத்ததையெல்லாம் எழுதிவிட்டோம் என்கிற திருப்தியுடன் தேர்வு அறையிலிருந்து மகிழ்ச்சித் துள்ளலோடு வெளிவரலாம். அதற்கான எளிய வழிகளைக் கலகலப்பான மொழியில் விவரிக்கும் நூல் இது. “சுட்டி விகடன்” இதழுடன் இணைப்பிதழாக வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற பயனுள்ள கையேடு.
வாசியுங்கள், சாதியுங்கள், தேர்வு பயம் இனி இல்லை!