சார்லி சாப்ளினின் பெரும்பாலான படங்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வயதானவை. ஆனாலும், இன்றைக்கும் அந்தப் படங்களில் ஓர் உயிர்ப்பு இருக்கிறது. இந்தத் தலைமுறையிலும், இனிவரும் தலைமுறைகளிலும்கூட எல்லா வயதினரும் பார்த்து ரசிக்கக்கூடிய நிரந்தரத்தன்மை அநேகமாகச் சாப்ளினின் எல்லாப் படைப்புகளுக்கும் உண்டு.
அவருடைய படங்களைப்போலவே, சார்லி சாப்ளினின் வாழ்க்கையிலும் சிரிப்பு, சோகம் இரண்டும் சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது. அந்தக் கலவையை இந்த நூல் விறுவிறுப்பாகப் பதிவுசெய்கிறது.