தூக்கு மேடை ஏறியபோது பகத் சிங்கின் வயது வெறும் 23. அந்தச் சிறிய வயதில், ஒட்டுமொத்த தேசத்தின் நேசத்தைப் பெறுமளவு அவர் என்ன பெரிதாகச் செய்திருக்கமுடியும்? இன்றைக்கும் அவரது புகைப்படத்தையோ ஓவியத்தையோ பார்த்தவுடன், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மரியாதை வருகிறதே, ஏன்? அவர் மறைந்து சுமார் எண்பது வருடங்களாகியும், அவரது கருத்துகள் இன்றைக்கும் பொருந்துகிறவையாக, அழுத்தமான தாக்கம் உண்டாக்கக்கூடியவையாக இருப்பது எப்படி? கவிதைகளாக, பாடல்களாக, கதைகளாக, நாடகங்களாக, புத்தகங்களாக, தெருக்கூத்தாக, திரைப்படங்களாக, காமிக்ஸ்களாக… இப்படிப் பல்வேறு கலை வடிவங்களில் அவருடைய சரித்திரம் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறதே, எதற்காக?
பகத் சிங்கின் வாழ்க்கையைச் சுவையாகவும் விறுவிறுப்பாகவும், அதேசமயம் ஆதாரப்பூர்வமாகவும் விவரிக்கும் நூல் இது.