அமுல்

அமுல் : ஓர் அதிசய வெற்றிக் கதை: இந்திய வெண்மைப் புரட்சியின் வரலாறு (Tamil Edition) by [என். சொக்கன் N. Chokkan]

இந்திய மக்களின் நாவோடும் இதயத்தோடும் கலந்துவிட்ட ஒரு பெயர் அமுல். பால், வெண்ணெயில் தொடங்கிச் சாக்லெட், ஐஸ்க்ரீம்வரை அமுலை ருசிக்காதவர்களே கிடையாது.

அமுலின் தயாரிப்புகள் சுவையானவைதான்; அதே நேரம், அந்தப் பெயருக்குப் பின்னாலிருக்கும் அதிசயமான சமூக வரலாறு இன்னும் சுவையானது. மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் தன்னலமில்லாத, முனைப்பும் உழைப்பும் மிகுந்த தலைவர்களுடைய வழிகாட்டுதலால் வளர்ந்தது, லட்சக்கணக்கான கிராமவாசிகள், எளிய மனிதர்களுடைய வாழ்க்கையை மாற்றியமைக்கிற, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டுகிற நிறுவனமாகச் சிறந்து விளங்குகிறது.

இந்திய வெண்மைப் புரட்சியைத் தொடங்கிவைத்த அமுலின் வெற்றிக் கதையைச் சுவையான மொழியில் விவரிக்கிறார் என். சொக்கன். ஒரு நாவலைப்போல் விரியும் இந்தப் பரபரப்பான கதை, கூட்டுறவுச் சிந்தனையின் வெற்றிக்கு உண்மைச் சான்று, இந்தியர்கள் ஒவ்வொருவரும், குறிப்பாக, இளைஞர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய வரலாறு.