திறமையும் உழைப்பும்தான் வெற்றிக்கு அடிப்படை. ஆனால், அவைமட்டும் போதுமா? விதை சிறப்பாக இருந்தாலும், சரியான ஈரப்பதம், மண்வளம், சூரிய ஒளி, தண்ணீர் எல்லாம் இருந்தால்தானே நல்ல மரம் கிடைக்கிறது? அதுபோல, வெற்றிபெற விரும்புகிறவர்கள் பல நுட்பங்களைக் கற்றுக்கொண்டு சரியான நேரத்தில் சரியான விதத்தில் பயன்படுத்தவேண்டியிருக்கிறது.
திட்டமிடல் (Planning), முக்கியத்துவம் அறிதல் (Prioritization), தகவல்தொடர்பு (Communication), குழுவாகச் செயல்படுதல் (Teamwork), பச்சாதாபம் (Empathy), விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுதல் (Handling Criticism), ஊன்றிக் கவனித்தல் (Listening), சுயகட்டுப்பாடு (Self Control), தீர்மானமெடுத்தல் (Decision Making) போன்ற வெற்றிக்குத் தேவையான நுட்பங்களை எளிய மொழியில் இனிமையாக அறிமுகப்படுத்துகிற, அவற்றைப் பெறுவதற்கான வழிவகைகளைச் சொல்லித்தருகிற நூல் இது. ‘கோகுலம்’ இதழில் வெளியாகிப் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோரின் வரவேற்பைப் பெற்ற தொடரின் நூல் வடிவம்.
ஆழ்ந்து வாசியுங்கள், அருமையாகச் சாதியுங்கள்