எலிக்கும் பூனைக்கும் திருமணம் (சிறுவர் கதைகள்)

எலிக்கும் பூனைக்கும் திருமணம்: சிறுவர் கதைகள் (Tamil Stories For Kids) (Tamil Edition) by [என். சொக்கன் N. Chokkan]

சிறுவர்களுக்கேற்ற எளிய, அழகிய, சின்னஞ்சிறிய தமிழ்க் கதைகள்.

ஊடகங்களில் சிறுவர்களுக்கான படைப்புகள் அனைத்திலும் ஆங்கிலக்கலப்பும் வன்முறையும் நம் சூழலுக்குப் பொருந்தாத பண்பாட்டுக் குறிப்புகளும் மிக இயல்பாகிவிட்ட இன்றைய சூழலில், இக்கதைகள் நல்ல தமிழில், சுவையான நடையில் நம் வாழ்வியலை இயல்பாகச் சொல்லித்தருகின்றன. சிறுவர்களுடைய கற்பனையைத் தூண்டிவிட்டு மகிழ்விக்கின்றன.

வாசிக்கத் தெரிந்த குழந்தைகளும், மற்றவர்களை வாசித்துக்காட்டச்சொல்லிக் கேட்கிற குழந்தைகளும், குழந்தை மனம் கொண்ட பெரியவர்களும்கூட இக்கதைகளைக் கொண்டாடுவார்கள்.