தினமலரில் வெளிவந்து ஏராளமானோரை மகிழ்வித்ததோடு, இலகுவான முறையில் தமிழ்ச் சுவையையும் கற்றுக்கொடுத்த கட்டுரைகள் இவை.
செல்பேசிக்கும் திருவள்ளுவருக்கும் என்ன தொடர்பு?
டகால் என்று தப்பித்தார், சட்டென்று ஒரு மாற்றம் வந்தது என்றெல்லாம் இன்று நாம் சொல்கிறோம், சங்க காலத்திலும் இப்படிப்பட்ட சொற்கள் இருந்தனவா? தமிழில் எண்களைச் சொல்வதற்கும் முகவரியை எழுதுவதற்கும் நாம் ஏன் தயங்குகிறோம்? தவறில்லாமல் ஒரு கதையை அல்லது ஒரு கவிதையை எழுதுவதற்குப் பாரதிதாசன் சொல்லும் ஆலோசனை என்ன? இலக்கண விதிகளைச் சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள ஏதேனும் வழிமுறை இருக்கிறதா?
சங்க இலக்கியம் முதல் நவீன படைப்புகள்வரை முற்றிலும் எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் பெருஞ்செல்வத்தை அள்ளிக்கொண்டு வந்து முற்றிலும் புதிய முறையில் தமிழ் இலக்கணம், இலக்கியம், கலை நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கிறது இந்நூல்.
பிழையின்றி நல்ல தமிழில் எழுதவேண்டும், நம் தாய்மொழியாம் தமிழின் இனிமையை, செழுமையை, வளமையை அறிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இந்நூல் பயனளிக்கும்.
மூன்று பாகங்களாக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற, ‘மாணவர்களுக்கான தமிழ்’ நூல் தொடரின் மூன்றாம் பாகம் இது. மற்ற இரு பாகங்கள் இங்கே: பாகம் 1, பாகம் 2