புலி

புலி (Tamil Edition) by [என். சொக்கன் N. Chokkan]

தந்தை, தாய், குழந்தை என ஓர் எளிய, வழக்கமான குடும்பம். பொதுவான கனவுகள், எதிர்பார்ப்புகள், பழக்கங்கள், நடவடிக்கைகள், எந்தவிதத்திலும் சராசரியிலிருந்து மாறுபடாத வாழ்க்கை.

திடீரென்று ஒருநாள், அந்த வீட்டுக் குழந்தை ஒரு புலிக்குட்டியோடு வந்துநிற்கிறது. ‘இது இனிமே நம்மோடதான் இருக்கும்’ என்கிறது. பெற்றோரைப் பதைபதைக்கவைக்கிறது.

அந்தப் புலி எங்கிருந்து வந்தது? எங்கே செல்லப்போகிறது?