Novels On Location என்ற இணையத்தளத்தைப்பற்றிச் சைபர்சிம்மன் எழுதியிருந்தார். உலக வரைபடத்தில் வெவ்வேறு இடங்களை க்ளிக் செய்தால், அந்த இடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்களைப்பற்றித் தெரிந்துகொள்ளலாமாம். ஆர்வமூட்டும் ஏற்பாடுதான்!
நேராக அந்தத் தளத்துக்குச் சென்று தென்னிந்தியாவை ஜூம் செய்தேன். சென்னையில் பொன்னியின் செல்வனையும் கோயம்பத்தூரில் திருக்குறளையும் இணைத்திருக்கிறார்கள் மக்கள்.
சிரிக்கவேண்டியதில்லை, இதுபோன்ற தளங்கள் Crowdsourcingமுறையில் இயங்குபவை, ஆகவே, நாம்தான் சரியான தரவுகளை இணைத்து இவற்றை மேம்படுத்தவேண்டும். உங்களுக்குப் பிடித்த அல்லது உங்கள் ஊரைப்பற்றிய தமிழ் நூல்களை இங்கு சேர்த்துவிடுங்கள். ஆளுக்கு ஒன்றிரண்டு என்று சேர்த்தாலும் சில நூறு தமிழக நூல்கள் வரைபடத்தில் இடம்பெற்றுவிடும்.