நீங்கள் விரும்பிப் படிக்கும் மின்னஞ்சல் இதழ்கள் (Email Newsletters) எவை? ஏன்? அவை எந்த வகையினருக்கு ஆர்வமூட்டும்? சிறு குறிப்புடன் இங்கு பரிந்துரையுங்கள்.
என்னுடைய பரிந்துரை: Randy Ingermanson வழங்கும் “Advanced Fiction Writing” e-Zine.
ஏன்?
மாதத்துக்கொருமுறைதான் எழுதுவார், ஆனால் ஒவ்வொரு கட்டுரையும் ஆழமாக (அதே நேரம் சுருக்கமாக), தலைப்புக்குப் பொருந்தும்வகையில் இருக்கும். அவருடைய இணையத்தள/மென்பொருள் பரிந்துரைகளும் மிகச்சிறப்பானவை.
இந்த மின்னஞ்சல் இதழ் யாருக்கு?
புனைகதைகளைப் (சிறுகதை/நாவல்) படிக்கிற, எழுதுகிற விருப்பம் கொண்டவர்களுக்கு.