பாரதிராஜா, மலேசியா வாசுதேவன், இளையராஜா என்ற கூட்டணியில் வந்த பாடல்களை யோசித்துக்கொண்டிருந்தேன். எதேச்சையாக மலேசியா வாசுதேவன் பாடப் புகுந்த “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு”வில் தொடங்கி, செவ்வந்திப் பூ முடிச்ச, தோப்பிலொரு நாடகம் நடக்குது (இந்தப் படத்தை அவர் இயக்கவில்லை; நடித்திருந்தார்), கோவில் மணி ஓசைதன்னை, மலர்களே நாதஸ்வரங்கள், இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது, வான் மேகங்களே, ஆயிரம் மலர்களே மலருங்கள், ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில், அரிசி குத்தும் அக்கா மகளே, ஒரு தென்றல் புயலாகி வருதே, பூங்காத்து திரும்புமா, ஏ குருவி, ஏறாத மலைமேல, அடி ஆத்தாடி நீ போகும் பாதை எங்கே பொன்மானே, ஏ ராசாத்தி, குயிலுக்குப்பம், ஏலமலைக் காட்டுக்குள்ளே என்று எத்தனை எத்தனை அழகழகான பாடல்கள்!

குறிப்பாக, ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ மலேசியா வாசுதேவனுடைய இசை வாழ்க்கையில் ஒரு முதன்மையான மைல்கல், மெட்டுக்கும் சொல்லுக்கும் காட்சிச் சூழலுக்கும் ஏற்ற அழுத்தம், உணர்வு, அழகு என்று அவருடைய கலைத்திறனின் உச்சம்.
எப்போதும் சொல்வதுதான், மலேசியா வாசுதேவனை நாம் இன்னும் இன்னும் நிறைய நிறையக் கொண்டாடியிருக்கவேண்டும்.