Knowledge Workers எனப்படும் அறிவுப் பணியாளர்கள் தங்களுடைய நேரத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதுபற்றி Calendly நிறுவனம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. சுமார் 1,000 பேரிடம் எடுக்கப்பட்ட சிறிய கணக்கெடுப்புதான். ஆனால், இந்தப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடக்கூடிய பார்வைகளை அளிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, இன்றைக்கு மக்களுடைய செயல்திறனை மிகவும் பாதிக்கிற Top 3 விஷயங்கள் எவை என்று பார்த்தால்:
- சொதப்பலான கருவிகள் (Tools)
- ஏகப்பட்ட (தேவையில்லாத) கூட்டங்கள்
- ஏகப்பட்ட (தேவையில்லாத) மின்னஞ்சல்கள்
இந்த மூன்று விஷயங்களும் நம்முடைய பணி வாழ்க்கையை மேம்படுத்துவதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது கருத்தளவில் உண்மைதான். ஆனால், நல்ல காயை நன்றாகச் சமைத்தால்தான் அது உடலுக்கு ஆற்றலைத் தரும், தவறானமுறையில் சமைத்தால் கெடுதியாகிவிடும், எதிர்மறைத் தாக்கத்தைத்தான் கொண்டுவரும்.
முழுக் கணக்கெடுப்பு அறிக்கையை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்.
உங்களுடைய அன்றாடச் செயல்பாடுகளில் எதை, எப்படி மாற்றினால் உங்கள் செயல்திறன் மிகுதியாகும் என்று நினைக்கிறீர்கள்? Commentsல் சொல்லுங்கள்.