தமிழில் புதிய சொற்களை உருவாக்குவதுபற்றிப் பெரிய விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுபற்றி உணர்ச்சிவயப்படாமல் சிந்திக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். சரியான திட்டமிடலும் ஆர்வமும் சேர்ந்தால் மொழிவளத்தை நன்கு மேம்படுத்தக்கூடிய செயலாக இது அமையும்.
நமக்குமுன் பல தலைமுறைகளில் அறிஞர்களும் ஆர்வலர்களும் இதைத் தொடர்ந்து செய்துவந்துள்ளார்கள். அதன் கனிகளை நாம் இன்றும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். அதனால், இதை மேலும் முன்னெடுத்துச்செல்லவேண்டிய கடமை நமக்கு உள்ளது.
தமிழுக்குப் புதுச் சொற்களை உருவாக்கவேண்டிய தேவை என்ன? அதை யார் செய்யலாம்? யார் செய்யவேண்டும்? எப்படிச் செய்யவேண்டும்? இதில் நம்முடைய உடனடி, நீண்டகாலத் தேவைகள் என்ன? அவற்றைத் தொழில்நுட்பம் எப்படி அனுமதிக்கிறது? நம் ஆற்றல் எந்தத் திசையில் செல்லவேண்டும்? … இந்தத் தலைப்புகளில் என்னுடைய கருத்துகளை இந்த வீடியோவில் பதிவுசெய்துள்ளேன்.
சுமார் 24 நிமிட வீடியோ. பொறுமை உள்ளவர்கள் கேளுங்கள்