காந்தி வழி (என். சொக்கன்) நூல் அறிமுகம்

நிதானமாக வாசிக்க ஒரு உபநிஷத்தை உள்வாங்கியது போல் இருந்தது.

காந்தியின் சத்திய சோதனை ஒருவர் முழுமையாக படித்தாலே மனமாற்றம் நிச்சயமாக நிகழும். ஏனெனில் மகாத்மா சொல்லியதோடு மட்டுமல்ல சொல்லிய வண்ணம் வாழ்ந்து காட்டியவர்.

காந்திய எழுதிய From Yerveda Mandir தழுவி 14 மையக் கருத்துக்களை விவரித்து எழுதியிருக்கிறார் எழுத்தாளர் திரு என்.சொக்கன்.

தெளிவான நடையில், உதாரண சம்பவங்களோடு அவ்வப்போது திருக்குறளையும் மேற்கோளிட்டு படைத்திருக்கிறார்.

எல்லோருக்கும் தெரிந்த அறவுரையே!

  • தீயவை செயலால் மட்டும் அல்ல எண்ணத்தால் நினைப்பது கூட பாவமாகும்,
  • உடைமைகள் சேர்ப்பது என்பது சுமை
  • அவரவர் மதம் அவரவருக்கு சிறப்பு. மதங்கள் எல்லாம் ஒன்றே
  • தேவைக்கு அதிகமாக உண்பது என்பது உடலை தண்டிப்பதாகும்
  • உடல் உழைப்பு இல்லாமல் உண்பது பாவமாகும்

என்பதான நன்னடத்தைகளை நினைவூட்டும் ஓர் நல்ல நூல்.

தாகம் உள்ளவர்களுக்குக்கே தண்ணீரின் அருமை தெரியும், எனவே நன்னெறியில் ஆர்வமுள்ளோர் வாசித்து மகிழ்க!

(என்னுடைய ‘காந்தி வழி’ நூலுக்கு M விஜயராகவன் எழுதியுள்ள அறிமுகக் குறிப்பு இது)

காந்தி வழி அச்சு நூல் வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்

காந்தி வழி கிண்டில் மின்னூல் வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *