வணக்கம். நலமா?
தங்களின் ‘இரும்புக்கை மாயாவி லட்சுமி மிட்டல்’ வாழ்க்கை வரலாற்றைப் படித்து முடித்துவிட்டுச் சுடச்சுட உங்களுக்கு எழுதுகிறேன். இரண்டே நாட்களில் படித்து முடித்த மிகச்சில புத்தகங்களில் ஒன்று இது.
எப்போதாவது செய்திகளில் தென்படுகிற மிட்டல் அவர்களின் வரலாற்றை முழுவதும் படித்ததில் மகிழ்ச்சி. என்னைப் போன்ற சிறு தொழில்முனைவோனுக்கு மிட்டல் அவர்களின் தொழில்முறை வழக்கங்களைப் படித்தது உற்சாகமாக இருக்கிறது. புத்தகத்தை முடித்ததோடு விட்டுவிடாமல் மிட்டல் ஆலைகளின் தற்போதைய நிர்வாகம், அவர் ஆர்செலரை வாங்கினாரா? உருக்கு ஆலைகளின் தற்போதைய நிலவரம் என்ன? என்று பல கேள்விகளுக்கு விடை தேடத்தூண்டுவது தங்களின் வெற்றி.
என்றும் நலமே சூழட்டும். நன்றி 🙏🏽
: சூர்ய குமார்