‘மாணவர்களுக்கான தமிழ்’ என்ற பொதுத்தலைப்பில் நான் எழுதிவரும் கட்டுரைத் தொடர் நூல்களைக் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுவருகிறது. இதுவரை மூன்று தொகுதிகள் வெளியாகியுள்ளன, அடுத்த இரு தொகுதிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
இந்தத் தொகுதிகள் ஒவ்வொன்றிலும் 100 கட்டுரைகள் இடம்பெறுகின்றன. இவற்றின் சிறப்பம்சம், எந்தக் கட்டுரையும் 200லிருந்து 300 சொற்களைத் தாண்டாது, அதே நேரம், எளிமையான, தெளிவான முறையில், துளியும் போரடிக்காதவகையில் தமிழ் சார்ந்த ஒரு தலைப்பை அறிமுகப்படுத்தும், அதை மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும். நூல்கள், எழுத்தாளர்கள், பண்பாட்டு அம்சங்கள், வரலாறு, இலக்கணம் என்று அனைத்தும் இதில் உண்டு, ‘மாணவர்களுக்காக’ என்று மார்க்கெட்டிங் செய்தாலும், பெரியவர்களும் இதைப் பரவலாகப் படிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள். தமிழக அரசுப் பாடநூல் கழகம் தமிழ்ப் பாடத்துக்கான கூடுதல் வாசிப்பு/Reference நூல்களில் ஒன்றாக இதைப் பரிந்துரைத்துள்ளது.
இங்கு க்ளிக் செய்தால் ‘மாணவர்களுக்கான தமிழ்’ மூன்று தொகுதிகளையும் காணலாம். ஏதேனும் ஒன்றை வாங்கிப் படிக்கத் தொடங்குங்கள், அல்லது, உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள், அடுத்த சில நாட்களில் மற்ற இரண்டு தொகுதிகளையும் நீங்களே தேடி வாங்குவீர்கள்!
அருமை.. சுட்டி வேலை செய்ய வில்லை.. சரி பார்க்கிறீர்களா
அருமையான பதிவு
https://tamilmoozi.blogspot.com/?m=1