இளம் எழுத்தாளர்களுக்கு ஐந்து குறிப்புகள்: மார்கரெட் அட்வுட்

புகழ் பெற்ற கனடிய எழுத்தாளர் மார்கரெட் அட்வுட், இளம் எழுத்தாளர்களுக்கு (குறிப்பாக 11 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு) வழங்கும் ஐந்து குறிப்புகள்:

Image Courtesy: Wikimedia Commons
ActuaLitté / CC BY-SA
  1. எப்போதும் கையில் ஒரு நோட்டுப்புத்தகத்தை வைத்துக்கொள்ளுங்கள்; உங்களுக்குத் தோன்றுகிற, பின்னால் பயன்படும் என்று நீங்கள் நம்புகிற விஷயங்களை உடனே குறித்துவைத்துக்கொள்ளுங்கள்
  2. நிறையப் படியுங்கள்; படிக்கிறவற்றை ஆராயுங்கள்: எனக்கு எது பிடிக்கிறது? எது பிடிக்கவில்லை? ஏன் பிடிக்கிறது? ஏன் பிடிக்கவில்லை? இதில் எந்தப் பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன? ஆசிரியர் எப்படி இந்தக் கதையைக் கட்டமைத்திருக்கிறார்? அவர் மொழியை எப்படிக் கையாள்கிறார்? இப்படிப் படிக்கிற அனைத்தையும் ஆராய்ந்து கற்றுக்கொள்ளுங்கள்
  3. நீங்கள் அமர்ந்து எழுதும் நிலையைக் கவனியுங்கள்; எழுதும் செயல் உங்கள் உடலுக்கு மிகப்பெரிய பளுவை ஏற்றக்கூடியது; அது இளவயதில் தெரியாது, பின்னால்தான் தெரியும்; அதையெல்லாம் தவிர்க்கவேண்டுமென்றால், உடற்பயிற்சி செய்யுங்கள், தினமும் நடந்து பழகுங்கள்
  4. எழுதிக்கொண்டே இருக்கும்போது ஒரு தடை (block) ஏற்படுகிறது, அடுத்து என்ன செய்வது என்று புரியாவிட்டால், சிறிது தூரம் நடந்துவிட்டுத் திரும்புங்கள், அல்லது, தூங்கி எழுங்கள், பல நேரங்களில் இந்த இரண்டில் ஒன்று உங்கள் பிரச்னைக்கான தீர்வைக் கொண்டுவந்து கொடுத்துவிடும்
  5. எழுதும்போது, யார் என்ன நினைப்பார்களோ என்று எண்ணி எதையும் மாற்றாதீர்கள்; எழுதியபின், அது உங்களுக்கே பிடிக்காவிட்டால், எழுதியதைத் தூக்கி எறிய அஞ்சாதீர்கள்

(2018ல் National Centre for Writingக்கு மார்கரெட் அட்வுட் வழங்கிய ஒரு பேட்டியிலிருந்து)

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *