இன்று அலுவலகத்தில் கேட்ட ஒரு முத்து:
‘நீங்க ஒரு விஷயத்தைச் சொல்றீங்க. ஆனா, அது இன்னொருத்தருக்குப் புரியலை. திருதிருன்னு முழிக்கறார், இல்லாட்டி, அசட்டுத்தனமா ஒரு கேள்வி கேட்கறார். அப்ப, யோவ் நீ என்ன லூசான்னு அவர்மேல கோவப்படாதீங்க. கொஞ்சம் பொறுமையா நீங்க சொன்ன முதல் விஷயத்தை ஆராய்ஞ்சு பாருங்க. அது உங்களுக்குப் புரியுது, ஆனா அவருக்குப் புரியலை, அது ஏன்னு ஒரு நிமிஷம் யோசிங்க. பல நேரங்கள்ல தப்பு நம்மமேலதான் இருக்கும். எதிர்ல இருக்கறவருக்கு எது தெரியும், எது தெரியாதுன்னு யோசிக்காம நம்ம கோணத்திலேர்ந்து அதைச் சொல்லியிருப்போம். அந்தத் தப்பைத் திருத்திக்கிட்டு அதை இன்னொருவாட்டி சரியா, விளக்கமாச் சொன்னா அவருக்கும் சந்தோஷம், நம்ம தகவல் தொடர்புத் திறமையும் மேம்படும்.’