ஓர் இணையத் தளத்தில் இப்படி ஒரு குறிப்பைப் பார்த்தேன்:
I want to save for my retirement 30 years later. Can someone please recommend a good investment plan with a good interest rate in a brief manner?
எல்லாம் சரி, அந்த brief என்ற சொல்தான் விநோதமாக இருக்கிறது. முப்பது ஆண்டுச் சேமிப்பு என்பது மிகப் பெரிய விஷயமில்லையா? அதை இன்னொருவர் 4 வரியில் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்பேர்ப்பட்ட சோம்பல்!
பிறரிடம் தீர்வுகளை, அதுவும் அவசரத் தீர்வுகளைக் கேட்டுப் பழகிவிட்டால் மூளை மழுங்கிப்போகும், அந்தத் தீர்வுகள் நமக்குப் பொருத்தமாகவும் இருக்காது. அவரவர் தேவைக்கு அவரவர் படித்து, கேட்டு, முயன்று பார்த்துத் தீர்மானிப்பதுதான் சரிப்பட்டுவரும். அந்த நேர முதலீட்டைச் செய்யத் தயாராக இல்லாதவர்கள் நிரந்தர எடுப்பார் கைப் பிள்ளைகள்தான்.