இப்போது Amazon Prime உறுப்பினர்களுக்குமட்டும் Kindle Unlimited 2 மாதச் சந்தா ரூ 99க்குத் தருகிறார்கள். (உண்மை விலை ரூ 398). பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்தச் சலுகையைப் பெற, இங்கு கிளிக் செய்யுங்கள்.
Amazon Kindle Unlimited (கிண்டில் அன்லிமிட்டெட்) மின் நூலகத்தைப்பற்றி என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும்:
FAQ 1: Kindle Unlimited எதற்கு?
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் Kindle Unlimited முத்திரையைக் கொண்ட ஆயிரக்கணக்கான மின் புத்தகங்களை (eBooks) இலவசமாகப் படிப்பதற்கு.
FAQ 2: இதற்குக் கிண்டில் கருவி தேவையா?
தேவையில்லை. உங்கள் செல்ஃபோனில் கிண்டில் என்கிற இலவசச் செயலி (App) இருந்தால் போதும். இந்த இலவசச் செயலியைப் பெற, இங்கு கிளிக் செய்யுங்கள்.
FAQ 3: Kindle Unlimited உறுப்பினர் ஆகிவிட்டால் எல்லாக் கிண்டில் புத்தகங்களையும் இலவசமாகப் படிக்கலாமா?
இல்லை. Kindle Unlimited என்ற முத்திரை கொண்ட புத்தகங்களைமட்டும்தான் இலவசமாகப் படிக்க இயலும். அந்த முத்திரை இல்லாத புத்தகங்களை வாங்கிதான் படிக்கவேண்டும்.
FAQ 4: கிண்டில் அன்லிமிட்டெடில் அவ்வப்போது விலைச் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 2 மாதச் சந்தா ரூ 99 என்று சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படி நாம் அந்தச் சலுகை விலையைச் செலுத்தி உறுப்பினரானபின் 2 மாதம் கழித்து என்ன ஆகும்?
விரும்பினால் தொடர்ந்து (முழு விலையில்) உறுப்பினராக இருக்கலாம். அல்லது, 2 மாதம் முடிவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாக Kindle Unlimitedஐ Cancel செய்துவிடலாம்.
FAQ 5: ஒருவேளை Cancel செய்ய மறந்துவிட்டால் என்ன ஆகும்?
மூன்றாவது மாதத்துக்கு முழுக் கட்டணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்படும். அதனால் இதை நினைவில் வைத்து Cancel செய்வது உங்கள் பொறுப்பு.
FAQ 6: அப்படி Cancel செய்துவிட்டால் நான் பாதி படித்துக்கொண்டிருந்த புத்தகங்கள் என்ன ஆகும்?
அவை நீக்கப்படும். Kindle Unlimited உறுப்பினராக உள்ளவரையில் நீங்கள் அந்தப் புத்தகங்களைப் படிக்கலாம். அதன்பிறகு அவை உங்களுடைய கிண்டில் கருவி அல்லது செயலியிலிருந்து நீக்கப்பட்டுவிடும்.
FAQ 7: என். சொக்கன் மின்னூல்கள் Kindle Unlimitedல் கிடைக்குமா?
பெரும்பாலானவை (கிட்டத்தட்ட 80%) கிடைக்கும். சில நூல்கள் கிடைக்காது.
Amazon Kindle Unlimited (கிண்டில் அன்லிமிட்டெட்) உறுப்பினராக, இங்கு கிளிக் செய்யுங்கள்.