சங்கரா டிவி பெங்களூரு ஸ்டூடியோவில் கேமராமேன், உதவியாளர், மற்ற பணியாளர்கள் என்று யாருக்கும் தமிழ் தெரியவில்லை. அவர்களுக்கு நடுவில் அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆழ்வார்கள், கம்பர் என்று முழ நீளத்துக்குப் பேசியது மிக விநோதமான அனுபவம். அநேகமாக ‘இவன் யார்டா கிறுக்கன்!’ என்று அவர்கள் என்னைப் பார்த்திருப்பார்கள்.
இன்னொரு பிரச்சனை, என்னுடைய “பக்தித் தமிழ்” புத்தகத்தைப்பற்றிய பேட்டி என்றுதான் வரச்சொல்லியிருந்தார்கள். வந்தபின் ஒற்றை நாற்காலி போட்டு உட்காரவைத்து ‘நீங்களே உங்க புத்தகத்தைப்பத்தி 25 நிமிஷம் பேசிடுங்க சார்’ என்று சொல்லிவிட்டார்கள். அப்படியெல்லாம் திடீரென்று ஒரு தலைப்பில் பேசுவதற்கு நான் என்ன தொழில்முறைப் பேச்சாளனா? நடுங்கிப்போய்விட்டேன். அதன்பிறகு, எப்படியோ சமாளித்துக்கொண்டு பேசினேன்.
இன்றைக்குத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது, என்னுடைய திடீர்ப் பேச்சு நான் நினைத்த அளவு மோசமில்லை என்று தோன்றுகிறது. மகிழ்ச்சி. இந்தத் தலைப்பில் (பக்தி இலக்கியங்களை ஏன் படிக்கவேண்டும், எப்படிப் படிக்கவேண்டும்) இன்னும் கொஞ்சம் நிதானமாக ஒரு நாள் பேசவேண்டும்.
ஸ்டூடியோ இல்லாவிட்டால் என்ன, யூட்யூபில் வெளியிடலாம்.
***
தமிழின் மிக நீண்ட பக்தி இலக்கியப் பண்பாட்டிலிருந்து சிறந்த சில நூறு பாடல்களை எளிய விளக்கங்களுடன் விவரிக்கும் “பக்தித் தமிழ்” அச்சுப் புத்தகத்தை வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்
“பக்தித் தமிழ்” கிண்டில் மின்னூலை வாங்க, இங்கு கிளிக் செய்யுங்கள்