எழுத்தாளர் ஜான் கிரஷம் அவர்களுடைய பேட்டி ஒன்றில் அவர் தன்னுடைய எழுத்துப் பழக்கத்தைப்பற்றிப் பேசியவை:
1. கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஜனவரி 1ம் தேதியும் நான் ஒரு நாவலை எழுதத் தொடங்குகிறேன், அடுத்த ஆறாவது மாதம் நாவலை முடித்துவிடுவேன்
2. முதல் மூன்று மாதங்களுக்கு வாரந்தோறும் 5 நாட்கள் காலை 7 மணியிலிருந்து 10 மணிவரை எழுதுவேன், ஒரு நாளைக்குச் சுமார் 1000லிருந்து 2000 சொற்கள் எழுதுவேன்
3. நாவலின் முதல் காட்சியை எழுதுமுன் எனக்குக் கடைசிக் காட்சி தெரியவேண்டும். அதன்பிறகுதான் எழுதத் தொடங்குவேன்
4. அதே மேசை, அதே கணினி, அதே காஃபிக் கோப்பை, அதே காஃபி… எதுவும் மாறக்கூடாது
5. நான் எழுதும் கணினியில் இணையம் கிடையாது
கொடுத்துவைத்த புண்ணியவான். வேறென்ன சொல்ல!