வங்கிக் கணக்கை வைத்துதான் கோடீஸ்வரர், லட்சாதிபதிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை ஒரு கோடிப் பேர் வாங்கினால் அதுவும் ஒரு கோடீஸ்வரர்தான், ஓர் எழுத்தாளருடைய புத்தகங்களை ஒரு லட்சம் பேர் வாங்கினால் அவரும் ஒரு லட்சாதிபதிதான்.

அந்தவகையில், இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வர பிராண்ட்களை ‘Brand Footprints‘ என்ற பெயரில் ஆராய்ந்துள்ளார்கள். அதில் உயர்நிலையைப் பெற்றுள்ள, தலா ஒரு பில்லியன் (நூறு கோடிப்) பேரைச் சென்றடைந்துள்ள பத்து பிராண்ட்கள் இவை:
- பார்லே (இந்த பிராண்ட் ஆறு பில்லியன் பேரைச் சென்றடைகிறதாம்!)
- அமுல்
- கிளினிக் ப்ளஸ்
- பிரிட்டானியா
- கடி டிடர்ஜென்ட்ஸ்
- டாடா
- ஆவின்
- நந்தினி
- கோல்கேட்
- வீல்
இதில் ஐந்தாவது பிராண்டைமட்டும் நான் கேள்விப்பட்டதில்லை. மற்ற அனைத்தும் உண்மையிலேயே இந்தியர்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே கலந்துவிட்டவைதாம்!
இந்தப் பிராண்ட்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் இருக்கும் துணைப்பிராண்ட்களையும் எடுத்து ஆராயலாம். எடுத்துக்காட்டாக, அமுலுக்குள் மிகுதியானோரைச் சென்றடைந்த துணைப்பிராண்ட் ‘அமுல் வெண்ணெயாக’ இருக்குமென ஊகிக்கிறேன். டாடாவுக்கு? கோல்கேட்டுக்கு? பிரிட்டானியாவுக்கு?
ஹூம், இதைப் படித்ததும் எனக்கு ஆவின் பால்கோவா சாப்பிடவேண்டும்போலிருக்கிறது!
