கடந்த ஏழு ஆண்டுகளாக என்னுடைய கிண்டிலில் குவியலாகச் சேர்ந்துவிட்ட நூல்கள், ஆவணங்கள், கட்டுரைகளில் தேவையில்லாத ஆணிகளைப் பிடுங்கித் தூய்மைப்படுத்தினேன். கால இயந்திரத்தில் ஏறிப் பின்னோக்கிச் சென்று திரும்பினாற்போலிருந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்கு வெவ்வேறு திடீர் ஆர்வங்கள் முளைத்திருக்கின்றன, அதுதொடர்பான நூல்களையும் கட்டுரைகளையும் வரிசையாகச் சேர்த்திருக்கிறேன். அவற்றில் 10%ஐக்கூட ஒழுங்காகப் படிக்கவில்லை. அதற்குள் வேறு ஆர்வம், புதிய நூல்கள், கட்டுரைகள். அனைத்தையும் இப்போது திருப்பிப் பார்த்தபோது ஒருபக்கம் சற்று நாணமாகவும் இன்னொருபக்கம் சற்று மகிழ்ச்சியாகவும் இருந்தது.
ஆங்காங்கு இப்படிக் குப்பை சேர்ந்தாலும் பரவாயில்லை, புதியன கற்றுக்கொள்ளும் ஆர்வம் என்றென்றும் தொடரவேண்டும்!