திடீரென்று உங்களுக்கு ஐந்து புதிய மொழிகளில் புலமை கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது, ஏற்கெனவே உள்ள மொழித்திறனில் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் ஐந்து புதிய மொழிகளை நீங்கள் தெரிந்துகொள்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் எந்த ஐந்து மொழிகளைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
Twitterல் ConradkBarwa என்பவர் கேட்டிருந்த இந்தச் சுவையான கேள்விக்கு என்னுடைய பதில்:
1. கன்னடம் (உள்ளூர் மக்களுடன் இயல்பாக உரையாடுவதற்காக, வினோபா காண்பித்த வழி)
2. குஜராத்தி (காந்தி எழுத்துகளை அவர் எழுதிய வடிவில் படிப்பதற்காக)
3. வங்காளம் (ஏதோ ஒருவிதத்தில் இம்மொழியை எப்போதும் ‘அறிவாளிகளின் மொழி’யாகக் கருதிவந்திருக்கிறேன்)
4. ஜப்பானிய மொழி (அதன் பொம்மைத்தன்மைக்காக)
5. ஃபிரெஞ்சு மொழி (அதன் ஒலியழகுக்காக. பொதுவாகவே எனக்கு ஏதேனும் ஓர் ஐரோப்பிய மொழியைக் கற்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டு)
மலையாளமா வங்காளமா என்று நிறைய யோசித்தபின் வங்காளத்தைத் தேர்ந்தெடுத்தேன். வாய்ப்பிருந்தால் மலையாளத்தை ஆறாவதாகச் சேர்த்துக்கொள்வேன், ஃபிரெஞ்சைப்போல் அதுவும் ஒலியழகுக்காக.
உங்களுடைய ஐந்து மொழிகள் என்ன? கமெண்ட்ஸ் பகுதியில் சொல்லுங்கள். ஆர்வமுள்ளோர் ஜாவா, சி++ஐக்கூடச் சேர்த்துக்கொள்ளலாம்.