“பொருளாதார முன்னேற்றம் ஒருவருடைய உடல்நலத்தைப் பாதிக்கிறது என்றால், அது பொய்யான முன்னேற்றம் என்று பொருள். ஏனெனில், உடல்நலம் இல்லாவிட்டால் வெறும் பணத்துக்கு எந்த மதிப்பும் இல்லை.”
“Gandhiji on Villages” என்ற புத்தகத்தில் இந்த வரிகளைப் படித்தேன். 1935ல் காந்தி இந்த வரிகளை எழுதியபோது கிராம முன்னேற்றம்தான் அவருடைய மனத்தில் இருந்திருக்கிறது, அதற்கான முதன்மையான தொடக்கக் கருவிகளாகத் தூய்மை, நோய்களைத் தடுத்தல், குணப்படுத்துதல், ஊட்டச்சத்து மிக்க உணவு, பொதுவான உடல்நல மேம்பாடு ஆகியவற்றைக் கருதியிருக்கிறார். கிராம மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை, வருவாய் வாய்ப்புகளை உண்டாக்கித் தந்தால்மட்டும் போதாது, அவர்களுடைய உடல்நலத்தையும் உறுதிப்படுத்தினால்தான் அது உண்மையான பொருளாதார முன்னேற்றம் என்கிற திசையில் அவருடைய திட்டங்கள், பணிகள் அமைந்திருக்கின்றன.

வியப்பான விஷயம், இன்றைக்கு இந்த வரிகள் நகர்ப்புறங்களுக்கும் பொருந்துகின்றன. உடல்நலம், மனநலம் இரண்டையும் பாதிப்பதாகதான் இன்றைய பொருளாதார முன்னேற்றம் இருக்கிறது. சொல்லப்போனால், ஒன்றைக் கொடுத்துதான் இன்னொன்றை வாங்கவேண்டியிருக்கிறது. இது உண்மையான முன்னேற்றம்தானா?
***
தொடர்புடைய புத்தகம்: காந்தி யார்? (என். சொக்கன்)