‘காந்தி யார்?’ புத்தகத்தை எழுதத் தொடங்கியபோது அதற்கு நான் வைத்துக்கொண்ட அளவுகோல் ‘இந்த நூல் ஒரே நேரத்தில் சுருக்கமாகவும் இருக்கவேண்டும், விரிவாகவும் இருக்கவேண்டும்’ என்பதுதான். அதாவது, எளிதில் படிக்கக்கூடிய சிறு கேள்வி, பதில் வடிவம், அதே நேரம் காந்தியின் வாழ்க்கையைப்பற்றிய முழுமையான அறிமுகமும் இருக்கவேண்டும். நூலைப் படிக்கிறவர்கள் ஒன்று காந்தியின் நூல்களை, காந்தியைப்பற்றிய நூல்களைத் தேடிச் செல்லவேண்டும், அல்லது, இந்த நூலின்மூலம் நிறைவான உணர்வைப் பெறவேண்டும்.
இப்படி எனக்கு நான்மட்டும் வைத்துக்கொண்ட வரையறையை 100% பிரதிபலிக்கும்படி ஒரு நூல் விமர்சனத்தைக் கண்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!