எத்தனை மணி?

பல ஆண்டுகளாக அலுவலகங்களிலும் அவற்றுக்கு வெளியிலும் நான் கவனித்த ஒரு விஷயம்.

“We can talk any time except at 2PM” என்று எழுதினால், அதைப் பெரும்பாலான மக்கள் “We can talk at 2PM” என்றுதான் படிக்கிறார்கள், அப்படிதான் புரிந்துகொள்கிறார்கள், “2 மணி எனக்கும் ஓகே” என்றுதான் பதில் எழுதுகிறார்கள். இதை ஒருமுறை, இரண்டுமுறை இல்லை, பலமுறை பலரிடம் பார்த்துவிட்டேன்.

இது அவர்களுடைய அவசரமா? கவனக்குறைவா? அல்லது, நம்முடைய மூளை எல்லாச் சொற்றொடர்களையும் நேர்விதமாகதான் பார்க்க விரும்புகிறதா?

இந்தக் குழப்பத்தைச் சரி செய்ய ஓர் எளிய வழி, ‘We can talk at 4PM or 5PM’ என்பதுபோல் தெளிவாக அந்தச் சொற்றொடரை மாற்றிவிடுவதுதான். உண்மையில் அந்த முதல் சொற்றொடரில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால், விதிவிலக்குகளை முன்வைத்துப் பேசுவது குழப்பத்துக்குதான் வழிவகுக்கிறது.

பின்குறிப்பு: இதை எழுதும்போது 9 ஆண்டுகளுக்குமுன் எழுதிய ஒரு நகைச்சுவைக் கட்டுரை நினைவுக்கு வந்தது. இங்கு கிளிக் செய்து அதையும் படித்துச் சிரித்துவிடுங்கள் 🙂

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *