நம் மேதை

ஒரு மேதையை இனம் காண்பது எப்படி?

அது கிடக்கட்டும், ஒரு மேதையை ஏன் இனம் காணவேண்டும்? அதனால் நமக்கு என்ன நன்மை? (What’s in it for me?)

அறிவு சார்ந்த துறைகள்மட்டுமின்றி உணர்வு சார்ந்த துறைகளிலும் ‘படைப்பூக்கம், மேதைமை என்பவையெல்லாம் தேவையானவைதானா? சந்தையின் தேவைக்கேற்ப இருக்கிற நேரத்தில் மிகுதியாகச் செய்வதல்லவா உண்மையான திறமை?’ என்கிற கேள்வி வலுவாகிக்கொண்டிருக்கிறது. இந்தச் சிந்தனை பரவலானபிறகு, நமக்கு மேதைகள் தேவைப்படமாட்டார்கள், அதனால் அவர்கள் பெரிய எண்ணிக்கையில் உருவாகவும் மாட்டார்கள்.

ஆனால், மேதைகள் இல்லாத ஓர் உலகத்தில் நமக்குக் கிடைக்கும் லட்சிய பிம்பங்கள் வலுவிழந்துபோவார்கள். நாலு வரி நோட்டில் ஆசிரியர் ஒரு சொல்லைப் பிழையாக எழுதிவிட்டால் குழந்தையும் அதே பிழையை ஒழுக்கத்துடன் திரும்பத் திரும்பச் செய்வதுபோலப் புதியவர்கள் சராசரிகளைப் பிரதியெடுத்துப் பழகுவார்கள், அதன்மூலம் சராசரியின் அளவு மேலும் சரிந்துகொண்டே செல்லும்.

அதனால், நம்மிடையில் இருக்கிற மேதைகளை நாம் கொண்டாடவேண்டும். அதற்கு, அந்த மேதைகளை நாம் அடையாளம் காணவேண்டும். அவர்களிடம் என்ன சிறப்பு, மற்றவர்களிடமிருந்து அவர்கள் எப்படி, ஏன் வேறுபடுகிறார்கள் என்று காணவேண்டும். அதன்பிறகுதான் அவர்களைப் பிரதியெடுக்க முயல்வதும் அதில் வெல்வதும் தோற்பதும்.

இதற்கு மிக வசதியாகத் தமிழர்களுக்குக் கண்முன் இருக்கிற மேதை இளையராஜா. ஆனால் அவரை ஹிட் பாடல்களை வரிசையாக மெடல் குத்திவைத்துக்கொண்டிருக்கிற இசையமைப்பாளராகமட்டும் பார்க்காமல் அவர் ஏன் மேதை ஆகிறார் என்பதுபற்றிய என்னுடைய தனிப்பட்ட பார்வை, ‘மெட்ராஸ் பேப்பர்’ இளையராஜா சிறப்பிதழில் ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறேன். இந்த விஷயத்தில் அவரை வியப்பதுதான் எனக்குச் சாத்தியம், பிரதியெடுப்பதெல்லாம் (இதுவரை) வெறும் ஏக்கம்தான் என்கிற முன்குறிப்புடன் இதை வழங்குகிறேன்.

இந்தக் கட்டுரையைப் படிக்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.

Link in First Comment.

குறிப்பு: மெட்ராஸ் பேப்பர் சந்தா செலுத்திப் படிக்கவேண்டிய Paid இதழ்.

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *