என்னுடைய ‘கார்காலம்’ குறுநாவலைப்பற்றி மகேஷ் குமார் எழுதியுள்ள விமர்சனக் குறிப்பு:
உங்கள் ‘கார்காலம்’ குறுநாவலைப் படித்தேன். எப்போதும் குற்றவுணர்ச்சியைச் சுமந்துகொண்டு திரிகிற ஒரு Consultantன் விரிவான உள் உரையாடல்கள்… எனக்குப் பிடித்திருந்தன. ஆனால், இதைக் குறுநாவலாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை, நீண்ட சிறுகதை என்று வேண்டுமானாலும் சொல்லலாம் 😉
கதை முடிவதற்குள் அந்தக் கன்சல்டன்ட் தன்னைப்போன்ற இன்னொருவரைச் சந்திப்பார், ஏதாவது புதிய சிந்தனைகளைக் கற்றுக்கொள்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அப்படி எந்தத் தீர்மானத்துக்கும் வராமல் முடித்துவிட்டீர்கள். உங்கள் எண்ண ஓட்டமும் எழுத்தும் மிகச் சிறப்பாக உள்ளன! 👍👍