என்னுடைய ‘வெல்லுவதோ இளமை’ நூலைப்பற்றி சத்யஶ்ரீ எழுதியுள்ள விமர்சனக் குறிப்பு:
நம் எல்லோருக்கும் பரிச்சயமான பல பிரபலங்களின் வாழ்வில் அவர்கள் இளமைக் காலத்தில் சந்தித்த மிகப் பெரிய சவால்கள் அல்லது இக்கட்டான சூழல்கள் அல்லது இதுவா அதுவா எதைத் தேர்ந்தெடுப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுப்பதில் உள்ள குழப்பங்கள் மற்றும் இந்த எல்லா கடினங்களையும் தாண்டி அவர்கள் எல்லாம் எப்படி சாதித்தார்கள் என்று அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியுள்ளார்.
வெவ்வேறு துறைகளில் பிரபலமான 25 நபர்களின் இளமைப் பருவத்தில் நிகழ்ந்த முக்கியமான திருப்புமுனை தருணத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார்.
அதற்காக வளவளவென்று நீட்டி முழக்கவில்லை. ஒவ்வொருவரைப் பற்றியும் சுருக்கமாக இரண்டு மூன்று பக்கங்களுக்கு உள்ளாகவே நச்சென்று சொல்லியிருக்கிறார்.
விளையாட்டு, சினிமா, நிறுவனங்கள் போன்று வெவ்வேறு துறையில் பிரபலமானவர்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்.
இது சும்மா ஒரு முறை படித்துவிட்டு தூக்கி வைத்து விடும் புத்தகம் அல்ல. தேவைப்படும் போதெல்லாம் மீண்டும் படிக்க உதவும் கையேடு.