LinkedIn இணையத்தளம் சமீபத்தில் ஒரு மிக நல்ல வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் வேலை தேடுகிறவராக இருந்தால், உங்களுடைய புகைப்படத்திலேயே (Profile Picture) “Open To Work” என்ற வரிகளைச் சேர்க்கலாம். இதன்மூலம், உங்கள் பக்கத்துக்கு வருகிற எல்லாரும், குறிப்பாக, திறமையான பணியாளர்களைத் தேடிக்கொண்டிருக்கிற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இந்த முக்கியமான தகவலை அறிந்துகொள்ளலாம். உடனே உங்களைத் தொடர்புகொண்டு அந்த வேலைவாய்ப்பு பற்றிப் பேசலாம்.
சொல்லப்போனால், அவர்கள் உங்கள் பக்கத்துக்கு வரவேண்டியதுகூட இல்லை. தேடல் விடைகளில் உங்கள் புகைப்படம் தெரியும்போதே அதில் “Open To Work” என்ற வரிகள் தெளிவாகத் தோன்றுகின்றன. வேலை தேடும் ஒருவர் அதைப் பொதுவில் அறிவிக்கவும் HR அலுவலர்களிடையே தன்னைக் கூடுதலாகத் தெரியப்படுத்திக்கொள்ளவும் (அதாவது, தன்னுடைய Visibilityஐ மேம்படுத்தவும்) மிக நல்ல வழி இது.
இதற்கான வழிமுறையை இந்த இணைப்பில் காணலாம். தேவையுள்ளோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அட்வான்ஸ் வாழ்த்துகள்.
பின்குறிப்புகள்:
1. நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்பதைப் பகிரங்கமாக அறிவிக்கும் இந்த Frameஐ எல்லாரும் பார்க்கலாம், அதாவது, உங்களுடைய இப்போதைய மேலாளர், உடன் பணிபுரிவோரும் பார்க்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் இந்தத் தகவலைப் பொதுவில் அறிவிக்க விரும்பாவிட்டால், இந்த Frameஐப் பயன்படுத்தவேண்டாம்.
2. புதிய வேலை கிடைத்ததும் LinkedInக்குத் திரும்பிச் சென்று இந்த Frameஐ நீக்க மறந்துவிடாதீர்கள்!
1 Comment