மாணவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

தனஞ்சய் கீர் எழுதிய ‘Lokmanya Tilak : Father of Our Freedom Struggle‘ என்கிற திலகர் வாழ்க்கை வரலாற்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஓர் அழகான நிகழ்ச்சி.

திலகருடைய தந்தை கங்காதர் ஓர் ஆசிரியர். அவர் Trignometryபற்றி ஒரு புத்தகம் எழுதுகிறார். அது பெரிய அளவில் புகழ் பெறுகிறது. அவருக்குப் பல பரிசுகளெல்லாம் கிடைக்கின்றன.

அப்போது, கங்காதருடைய மாணவன் ஒருவன் அவருக்குக் கீழ் உதவியாளனாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறான். அவன் இதையெல்லாம் பார்த்துப் பொறாமைப்படுகிறான், கல்வித்துறை மேலதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான்:

‘ஐயா, அந்தப் புத்தகத்தைக் கங்காதர் சொந்தமாக எழுதவில்லை. அது ஓர் ஆங்கிலப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு. அதை நான்தான் அவருக்கு மொழிபெயர்த்துக் கொடுத்தேன். அதனால், நீங்கள் அவருக்கு அறிவித்திருந்த பரிசுப் பணத்தில் பாதியை எனக்குக் கொடுக்க வேண்டுகிறேன்.’

வன்மத்துடன் அவன் எழுதிய இந்தக் கடிதத்தை மேலதிகாரிகள் பொருட்படுத்தவில்லை, ‘யாரோ சின்னப் பயல், பொறாமையில் உளறுகிறான்’ என்று சும்மா விட்டுவிடுகிறார்கள்.

பின்னர், 1857ல் முதல் இந்திய விடுதலைப் போரின்போது அந்த உதவியாளன் ஓர் அரசியல் வம்பில் மாட்டிக்கொள்கிறான். அவனைப் பிடித்துச் சிறையில் அடைத்துவிடுகிறார்கள்.

அப்போது, கங்காதர் மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்துப் பேசுகிறார், ‘அவன் ஏதோ விவரமில்லாமல் செய்துவிட்டான். தயவுசெய்து அவனை விடுவித்துவிடுங்கள்’ என்று கேட்டு அவனைச் சிறையிலிருந்து வெளியில் கொண்டுவருகிறார். நெகிழ்ந்துபோன அந்த முன்னாள் மாணவன் நேராக வந்து அவருடைய காலில் விழுகிறான்.

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *