23 டிசம்பர் 2023 அன்று அரவிந்த் கண் மருத்துவமனையின் பதிப்புத்துறைப் பணியாளர்களுக்கு ‘Mid-career Realities: Opportunities, Threats and Professional Mastery’ என்ற தலைப்பில் ஒரு பயிற்சியளித்தேன். (நிகழ்ச்சி தமிழில்தான் நடைபெற்றது. தலைப்பைமட்டும் ஆங்கிலத்தில் கொடுத்தார்கள்.)
Career எனப்படும் பணிவாழ்க்கை தொடர்பான உரையாடல்கள் தமிழில் அரிதாகத்தான் நடக்கின்றன. அதிலும் குறிப்பாக, பணிவாழ்க்கையின் நடுவிலுள்ளோர் (குத்துமதிப்பாக, 35 முதல் 45 வயதுள்ளோர்) எதிர்கொள்கிற சவால்கள், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள், அவற்றைத் தாண்டி அவர்கள் தங்கள் துறையில் மேதைமையையும் மன நிறைவையும் எட்டுவது எப்படி போன்றவற்றைப் பெரும்பாலானோர் பேசுவதில்லை. அவ்வகையில் இந்த ஒன்றரை மணி நேரப் பயிற்சியை இந்தத் துறைக்கு என்னுடைய குறிப்பிடக்கூடிய பங்களிப்பாகக் கருதுகிறேன்.
இந்தப் பயிற்சியின் வீடியோப் பதிவை இங்கு பார்க்கலாம். இந்த வயது நிலையில் உள்ள உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.